ஹிந்தியால் "இண்டியா" கூட்டணியில் வெடித்த சர்ச்சை.!! - டி.ஆர் பாலுவிடம் எகிறிய நிதிஷ் குமார்.!
Controversy in India alliance because Nitishkumar said that should learn Hindi
வரும் 2024-ம் ஆண்டு நடைபெறும் மக்களவை பொது தேர்தலில் பாஜக-வை வீழ்த்திவிட வேண்டும் என்ற நோக்கத்தில், காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ் , தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி உள்பட 29 கட்சிகள் இணைந்து இண்டியா கூட்டணியை உருவாக்கியுள்ளது. இந்த கூட்டணியின் முதல் கூட்டம் பாட்னாவிலும்,2வது கூட்டம் பெங்களூரிலும் 3வது கூட்டம் மும்பையிலும் நடைபெற்ற நிலையில் 5 மாநில சட்டமன்ற தேர்தல் இண்டியா கூட்டணியில் சலசலப்பு ஏற்படுத்தியது. இந்த தேர்தலில் 4 மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வி சந்தித்தால் காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது
இதற்கிடையே இண்டியா கூட்டணியின் 4வது ஆலோசனைக் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. திமுக தலைவர் மு.க ஸ்டாலின், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, ஜேடியூ தலைவர் நிதிஷ்குமார், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிவசேனா உத்தவ் தாக்கரே கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே, தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, இடதுசாரித் தலைவர்கள் டி. ராஜா, சீத்தாராம் யெச்சூரி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, சோனியா காந்தி, சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இண்டியா கூட்டணிக் கூட்டத்தில் இந்தியில்பேசியிருக்கிறார் பீகார் முதல்வர் நிதிஷ் குமார். அவரது பேச்சை இந்தியில் இருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும்படி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலு கேட்க ஆர்ஜேடி கட்சியின் எமபி மனோஜ் கேஜா மொழிபெயர்க்கத் தொடங்கியுள்ளார்.
இதனால் அதிருப்தியடைந்த நிதிஷ் குமார், மொழிபெயர்ப்பை நிறுத்துமாறு கூறிவிட்டு தேசிய மொழியான இந்தியைக் கற்க வேண்டும். நாடு ஆங்கிலேயர்களை விரட்டியடித்துவிட்டது. காலனித்துவ எச்சங்களைத் தவிர்க்க வேண்டும். சிலர் நான் பிரதமர் பதவிக்கு ஆசைப்படுவதாக அவதூறுகளைப் பரப்புகிறார்கள். நான் எந்தப் பதவியையும் விரும்பவில்லை"என பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
நிதிஷ்குமாரின் இந்த செயல் இந்தியா கூட்டணியில்அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. நிதிஷ்குமாரை சில தலைவர்கள் சமாதானம் செய்ததாகவும், ஏதோ கோபமாக இருப்பதாகவும், கூட்டத்தில் அவர் அமைதியாக இருக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. நிதிஷ்குமாரை தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர்கள், தலைவர்கள் ஆங்கிலத்தில் பேசியுள்ளனர். இந்தி திணிப்புக்கு திமுக தொடர்ந்து எதிர்ப்பு தெரியவித்து வரும் இந்த சூழலில் ஸ்டாலின் கலந்து கொண்ட கூட்டணி கட்சி கூட்டத்தில் இந்தி திணிப்பு அரங்கேறியதோடு, அதுக்குறித்து திமுக வாய்திறக்காமல் இருப்பது அரசியல் நாடகம் என இணையதள வாசிகள் திமுகவை விமர்சனமும் செய்து வருகின்றனர்.
English Summary
Controversy in India alliance because Nitishkumar said that should learn Hindi