#BigBreaking || தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகரிப்பு.! பள்ளி, கல்லூரிகளுக்கு முக்கிய அறிவிப்பு.!
CORONA LOCKDWN 2022
தமிழகத்தில் நோய்த்தொற்று பரவல் அதிகரித்துவரும் சூழ்நிலைகள் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதன்படி., வழிபாட்டுத் தளங்கள் தற்போது நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளை பின்பற்றி செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.
உணவகங்கள், விடுதிகள், தங்கும் விடுதிகள் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதி.
பொழுதுபோக்கு, கேளிக்கை பூங்காக்கள் 50 சதவீத வாடிக்கையாளர்கள் அனுமதி.
திருமண நிகழ்வுகள் அதிகபட்சம் 100 நபர்களுக்கு மட்டுமே அனுமதி. இறப்பு மற்றும் சார்ந்த நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மேல் பங்கேற்க கூடாது.
துணிக்கடைகள் மற்றும் மளிகை கடைகளில் ஒரே நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே இருப்பதை கடை உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.
தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள அனைத்து பள்ளி நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்படுகிறது. ஜனவரி மாதம் பத்தாம் தேதி வரை நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்படுகிறது.
ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள் நிலையான வழிகாட்டுதல்களின் பின்பற்றி செயல்படும்." என்று அறிவிக்கப்பட்டுள்ளது.