ஹரியானாவில் மீண்டும் வாக்கு எண்ணிக்கை? - தேர்தல் ஆணையத்தில் ராகுல் காந்தி புகார்!
Counting again in haryana rahul gandhi complains to the election commission
நடந்து முடிந்த அரியானா, ஜம்மு-காஷ்மீர் ஆகிய 2 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகி உள்ளது. அரியானாவில் பாஜகவின் நயாப் சிங் சைனி மீண்டும் முதலமைச்சராக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஜம்மு-காஷ்மீர் தேர்தலில் காங்கிரஸ் கட்சி கூட்டணி வெற்றி பெற்றதன் மூலம் தேசிய மாநாடு கட்சியின் துணைத்தலைவர் உமர் அப்துல்லா புதிய முதலமைச்சராக பதவியேற்பார் என்று சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பதிவில்,
ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு முழு மனதுடன் நன்றி என்றும், ஜம்மு காஷ்மீரில் வெற்றி பெற்றிருப்பது அரசியலமைப்பின் வெற்றி என்றும், ஜனநாயக சுயமரியாதைக்கான வெற்றி என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஹரியானாவின் எதிர்பாராத முடிவை நாங்கள் பகுப்பாய்வு செய்வதாக குறிப்பிட்டுள்ள அவர், பல சட்டசபை தொகுதிகளில் இருந்து வரும் புகார்கள் குறித்து தேர்தல் கமிஷனிடம் புகார் அளிக்க உள்ளதாகவும்,
தெரிவித்துள்ளார்.
ஆதரவு அளித்த ஹரியானா மக்களுக்கும், அயராது உழைத்த எங்கள் பாபர் ஷேர் தொழிலாளர்களுக்கும் மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ள ராகுல் காந்தி, உரிமைகள், சமூக மற்றும் பொருளாதார நீதி மற்றும் உண்மைக்கான இந்த போராட்டத்தை நாங்கள் தொடர்வோம் என்றும், உங்கள் குரலை தொடர்ந்து எழுப்புவோம் என்று கூறியுள்ளார்.
English Summary
Counting again in haryana rahul gandhi complains to the election commission