பிரபல அரசியல் கட்சி தலைவர் சீதாராம் யெச்சூரி மறைவு! அதிர்ச்சியில் தொண்டர்கள்! - Seithipunal
Seithipunal


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல்நலக்குறைவால் காலமானார் அவருக்கு வயது 72.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சுவாச பிரச்சனை காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சீதாராம் யெச்சூரி அனுமதிக்கப்பட்டார். 

தொடர்ந்து அவரின் உடல்நிலை மோசமானதாகவும், இதனால் செயற்கை சுவாசத்தின் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

எய்ம்ஸ் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்றுவரும் சீதாராம் யெச்சூரியின் உடல்நிலை குறித்து மருத்துவக்குழு தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

நேற்றைய முன்தினம் சீதாராம் யெச்சூரியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அக்கட்சி அதிகாரபூர்வகமாக அறிக்கை வெளியிட்டு இருந்தது.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சீதாராம் யெச்சூரி உயிரிழந்ததாக மருத்துவமனை அறிவித்துள்ளது.

சீதாராம் யெச்சூரியின் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CPIM Sitaram Yechuri dEATH


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->