பிரியாவிடை தோழர் - சீதாராம் யெச்சூரி மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்! - Seithipunal
Seithipunal


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி நுரையீரல் தொற்று, சுவாச பிரச்சனை காரணமாக இன்று  உயிரிழந்தார்.

சீதாராம் யெச்சூரி மறைவுக்கு நாடும் முழுவதும் பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், "இந்திய அரசியலின் ஜாம்பவான் சீதாராம் யெச்சூரி உயிரிழந்த செய்தி வருத்தமளிக்கிறது.

மாணவர் ஆர்வலரிலிருந்து ஸ்டேட்ஸ்மேன் வரையிலான அவரது பயணத்தில், அரசியலில் தனது அழியாத முத்திரையை பதித்தார். அவரது குடும்பத்தினருக்கும் எனது அனுதாபங்கள்.  பிரியாவிடை தோழர்.


காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், " சீதாராம் யெச்சூரி எனது நண்பர். நம் நாட்டின் மீது தெளிவான புரிதல் கொண்டவர், அதன் கொள்கையை காப்பாற்ற நினைப்பவர். நமது நீண்ட உரையாடல்களை தவறவிடுவேன்.

இந்த துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், "சீதாராம் யெச்சூரி மறைவு தேசிய அரசியலுக்கு இழப்பாகும். மூத்த நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அவரை நான் அறிவேன். அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

cpim sitaram yechury Death


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->