வேண்டுகோள்...! தனிப்பெரும் சங்கமாக உருவாக்குங்கள்...! - முதலமைச்சர் மு.க ஸ்டாலின்
Create unique association Chief Minister MK Stalin
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,'என்எல்சியில் நடக்கும் வாக்கெடுப்பில் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் எண் 6க்கு வாக்களித்து தனிப்பெரும் சங்கமாக உருவாக்குங்கள்' என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்:
மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,"நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் நடக்கவுள்ள ரகசிய வாக்கெடுப்பில் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தை வெற்றிப்பெற செய்ய வேண்டும்.
தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தை எண் 6ல் வாக்களித்து தனிப்பெரும் சங்கமாக உருவாக்கி தர வேண்டும்" என்றும் தெரிவித்துள்ளார்.
அதனுடன் முதலமைச்சர் தெரிவித்ததாவது, "முக்கிய கோரிக்கைகளை வென்றெடுக்க தொழிலாளர் முன்னேற்ற சங்கம் தனிப்பெரும் சங்கமாக வரவேண்டியது காலத்தின் கட்டாயம்.
தொழிலாளர் வாரிசுகள், நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை போன்றவை உறுதி செய்ய வேண்டிய கடமை நமக்கு உள்ளது " என்றும் தெரிவித்துள்ளார்.
இது தற்போது மக்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.
English Summary
Create unique association Chief Minister MK Stalin