குஜராத் தேர்தல் : கொலை குற்றவாளி பிரச்சாரம்.. பொதுமக்கள் கொந்தளிப்பு.!  - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலத்தில் வரும் டிசம்பர் 1 முதல் 5 தேதிகள் வரை சட்டப்பேரவை தேர்தல் இருகட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த நிலையில், அங்கே தேர்தல் களமானது சூடு பிடிக்க துவங்கியுள்ளது. 182 தொகுதிகள் இருக்கின்றன. 

ஐந்து முறை வெற்றி பெற்று பாஜக ஆட்சி அமைத்துள்ளது. இந்த நிலையில், ஆறாவது முறையாகவும் பாஜக ஆட்சியை கைப்பற்ற தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றது. பல்வேறு யுக்திகளை கையாண்டு அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது. 

அதே நேரத்தில் காங்கிரஸ் மீண்டும் தனது அதிகாரத்தை நிலை நாட்ட போராடிக் கொண்டிருக்கிறது. எப்போதும் இல்லாத ஒரு விஷயமாக ஆம் ஆத்மியும் போட்டியிட ஆயத்தமாகியுள்ளது. குஜராத்தில் தற்போது மும்முனைப் போட்டி நடைபெறுகிறது. பாஜக இரு கட்டங்களாக 166 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. 

இந்த நிலையில், பாஜக வெளியிட்டு இருக்கும் பட்டியலில் 2002 ஆம் ஆண்டு நடந்த மாபெரும் கலவர குற்றவாளியான மனோஜ் குல்கர்னியின் மகள் பாயலின் இடம்பெற்று இருக்கிறார். தனது மகள் வேட்பாளராக போட்டியிடும் நிலையில் பரோலில் வெளிவந்துள்ள மனோஜ் குல்கர்னி மகளுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார். 

எந்த தொகுதியில் கலவரம் நடந்து கொலை குற்றவாளியாக தீர்ப்பு அளிக்கப்பட்டதோ அதே தொகுதியில் தற்போது அவர் பிரச்சாரம் மேற்கொள்வது பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

criminal compaign for his daughter in gujarat election


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->