மின் கட்டண உயர்வு : மின் கட்டணத்தை செலுத்தாமல் அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்க திட்டம்!
current bill hike kovai protest sep
கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்க பொதுக்குழு ஆலோசனை கூட்டம்,பல்லடம் அருகே காரணம்பேட்டையில் நடைப்பெற்றது. அக்கூட்டத்தில் பேசிய சங்க தலைவர் பழனிசாமி மின் கட்டண உயர்வு அறிவிப்பை ரத்து செய்யும் வரை காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
ஜி.எஸ்.டி., கொரோனா ஊரடங்கு, கூலி உயர்வு பிரச்னை, பஞ்சு நுால் விலை உயர்வு பல போராட்டங்களை சந்தித்து நிம்மதி பெருமூச்சு விடும் நேரத்தில் தமிழக அரசு அறிவித்துள்ள மின் கட்டண உயர்வை அறிவித்துள்ளது.
கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்று எதிர்ப்பு தெரிவித்தும், அமைச்சர்கள், ஒழுங்குமுறை ஆணைய தலைவரை சந்தித்து மனு அளித்த பின்னரும் மின் கட்டண உயர்வு அமல்படுத்தி இருப்பதால் விசைத்தறி தொழில் காணாமல் போகும் சூழல் ஏற்படும் என, விசைத்தறி கூலி தொழிலாளர்கள் குமுறுகின்றனர்.
விசைத்தறிக்கான மின் கட்டண உயர்வை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி, இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் எனவும் விசைத்தறியாளர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக மின் கட்டணத்தை செலுத்தாமல் அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
current bill hike kovai protest sep