கரூர் சம்பவத்தை கிளப்பிய அதிமுக எம்.பி.!! கதிகலங்கிய திமுக தரப்பு.!! அதிரும் நாடாளுமன்றம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதாகவும், அது குறித்து விவாதம் நடத்த வேண்டும் எனவும் அதிமுக மாநிலங்களவையில் நோட்டீஸ் வழங்கியுள்ளது.

முன்னாள் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சரும் அதிமுக மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி சண்முகம் இன்று மாநிலங்கள் அவையில் தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை மற்றும் கரூரில் நடைபெற்ற வருமானவரித்துறையினர் சோதனையின் பொழுது மத்திய அரசு ஊழியர்கள் தாக்கப்பட்டது குறித்து விதியின் 176 இன் கீழ் குறுகிய கால விவாதிக்க வேண்டும் என மாநிலங்களவை தலைவருக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளார்.

அந்த நோட்டீஸில் வருமானவரித்துறை சோதனையின் பொழுது மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் பணி செய்யவிடாமல் தாக்கப்பட்டனர். குறிப்பாக பெண் அதிகாரிகள் தாக்கப்பட்டதாகவும், பாலியல் ரீதியில் அச்சுறுத்தப்பட்டதாகவும், பாதுகாப்பற்ற சூழலில் தாங்கள் பணியாற்றும் பிம்பத்தை பெண் அரசு ஊழியர்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையில் இந்த சம்பவம் நடைபெற்று இருப்பதாகவும், இதுகுறித்து குறுகிய கால விவாதம் நடத்தப்பட வேண்டும் எனவும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. 

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மணிப்பூர் விவகாரத்தில் முடங்கியுள்ள நிலையில் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து அதிமுக எம்.பி சிவி சண்முகம் நோட்டீஸ் வழங்கியிருப்பது திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களை கதிகலங்கச் செய்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CVeShanmugam notice RajyaSabha to discuss law and order situation in TN


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->