அது "ரோட் ஷோ இல்ல.. இறுதியாத்திரை"! - பாஜகவை விளாசிய சி.வி சண்முகம்.!!
CVShanmugam criticized BJP annamalai Narendra Modi
விழுப்புரம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆதரித்து முன்னாள் அமைச்சரும் தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான சிவி சண்முகம் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியில் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் "தமிழக பாஜகவின் இன்று வரை தலைவராக இருக்கும், நாளை தலைவராக இருப்பாரா என தெரியாது. ஏப்ரல் 19ஆம் தேதிக்கு மேல அவர் இருப்பாரா என அவருக்கே தெரியாது.
அந்த அரைவேக்காடு அண்ணாமலை சொல்லுது அண்ணா திமுக தேர்தலுக்குப் பிறகு இருக்காதுனு.. அதிமுக இருக்குமா இருக்காதா என்று நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் கட்சி ஆரம்பிச்சு 52 வருஷம் ஆச்சு..
ஜூன் நான்காம் தேதிக்கு பிறகு பாஜக இருக்குமா என்பதை பார்த்துக்கோ... உன் பக்கத்துல துப்பாக்கி இருக்கிற வரை தான் உன்னுடைய பேச்சு எல்லாம்.. நாங்க எல்லாம் துப்பாக்கி இல்லாமலேயே பேசுவோம்.. மத்தியில் உங்க ஆட்சி அதிகாரம் இருந்தால் தான் நீ பேசுவ.. நாங்க ஆட்சியில் இருந்தாலும் பேசுவோம்... ஆட்சியில் இல்ல நாளும் பேசுவோம்..
வாய் அடக்கத்தோடு பேசு... அதிமுகவை அளிப்பேன் என சொன்ன அண்ணாமலை உனக்கு ஒரு சம்பவத்தை ஞாபகப்படுத்துறேன் கேட்டுக்கோ.. தமிழகத்திற்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற தவறிய அன்றைய பாஜக வாஜ்பாய் அரசை வீட்டுக்கு அனுப்பிய கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்..
அப்போ உன்னோட வயசு என்ன தெரியுமா? நீ 9வது படிச்சிருந்திருப்ப... உன் வாஜ்பாய் பிஜேபி அரசு மூட்டை கட்டி வீட்டுக்கு அனுப்பிய கட்சியை அண்ணா திமுக... அன்னைக்கு உன்னுடைய வயசு 14.. குச்சி ஐசு சாப்பிட்டேன்னு இருந்திருப்ப நீ.. உங்க அப்பாவ கேளு... பாஜகவுக்கு இறுதி காலம் நெருங்கிவிட்டது.. அதனாலதான் ரோட் ஷோ நடத்துறாங்க.. அது ரோஜா இல்ல பாஜகவின் இறுதியாத்திரை.. அந்த வண்டி அலங்காரம் கூட நம்ம ஊர்ல பிணம் எடுத்துட்டு போற வண்டி மாதிரியே இருக்கு.." என பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் சி.வி சண்முகம்.
English Summary
CVShanmugam criticized BJP annamalai Narendra Modi