பாஜகவுக்கு முடிவு கட்டிய ஒரு வீடியோ?! கொங்கு மொத்தமும் இனி காலி! பரபரப்பு டிவிட்! - Seithipunal
Seithipunal


நேற்று கோவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி பற்றி நடந்த கூட்டத்தில், அன்னபூர்ணா ஹோட்டல் நிறுவனர் சீனிவாசன், மாறுபட்ட ஜிஎஸ்டி வரி இருப்பதால், பில் போடுவதில் சிக்கல் இருப்பதாக குற்றம் சாட்டி இருந்தார்.

இதுகுறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், நிர்மலா சீதாராமனிடம் சீனிவாசன் மன்னிப்புக் கேட்ட விடியோ ஒன்றை பாஜகவினர் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டனர்.

இந்த காணொளியை பார்த்த பலரும், அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொழிலதிபரை மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்ததாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். அதில், "அதிகார மமதையில் ஆளும் பாசிச பாஜக அரசு!

மத்திய நிதி அமைச்சர் பங்குபெற்ற கூட்டத்தில் பேசிய அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் எந்தவிதத்திலும் தவறாக பேசவில்லை. தங்கள் தொழிலில் சந்திக்கும் சில பிரச்சினைகளை கோரிக்கையாக முன் வைத்தார்.

அதற்காக அவரை அழைத்து மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்திருப்பது தமிழ்நாட்டு மக்களையே கேவலப்படுத்தும் செயல்! அதை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டிருப்பது பாசிசத்தின் உச்சம்!

கோயம்புத்தூர் மக்கள் பாசத்தில் மட்டுமல்ல ரோசத்திலும் அதிகமானவர்கள் தான்! இனி எந்த காலத்திலும் தமிழ்நாட்டிலும் கோவையிலும் மக்கள் பாஜக-வை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்! இந்த செயலால் இன்னுமொரு  நூறாண்டு ஆனாலும் பாஜக இதற்காக வருந்தும்" என்று தெரிவித்துள்ளார்.

ஜெயக்குமாரை போலவே பல்வேறு அதிமுக நிர்வாகிகளும் இனி கொங்கு மண்டலத்தில் இனி பாஜகவுக்கு ஒரு வாக்கு கூட கிடைக்காது என்று கருத்து தெரிவித்து வருகிகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

D Jayakumar Condemn to BJP


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->