திருப்பதி தேவஸ்தானத்தில் ஓபிஎஸ் சாமி தரிசனம்.. காரணம் என்ன தெரியுமா.? - Seithipunal
Seithipunal


அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் தமிழக முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் சாமி தரிசனம் செய்து வருகிறார்.

அதிமுகவில் இரட்டை தலைமை பிரச்சனை தலைதூக்கி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றது. சமீபத்தில், அதிமுக தலைமையில் பொதுக்குழு நடைபெற்றதில் ஒரு மனதாக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். கட்சியிலிருந்து, ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார்.

இதை எதிர்த்து ஓபிஎஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், அதிமுகவின் பொதுக்குழு செல்லாது என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதை எதிர்த்து எடப்பாடி மேல்முறையீடு செய்த நிலையில் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வந்த நிலையில், அடுத்ததாக ஓபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

இந்த நிலையில் புரட்டாசி மாத சனிக்கிழமையான இன்று திருமலை திருப்பதி சென்றுள்ள தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் இன்று காலை சாமி தரிசனம் செய்துள்ளார்.

ஓபிஎஸ் அதிமுக கட்சியில் இல்லை என்ற காரணத்தால் அதிமுக என்ற பெயரை அவர் பயன்படுத்தக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அடுத்ததாக ஓ.பி.எஸ் தனிக்கட்சி துவங்க போகிறார் என்று புதிய தகவல் வெளியாகியுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Darshan of OPS in Tirupati Devasthanam


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->