இலங்கையில் அவசரநிலை வாபஸ்.. அதிபர் கோட்டாபய ராஜபக்சே அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், கடும் இன்னலை மக்கள் சந்தித்து வருகின்றனர். உணவு பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெட்ரோல் நிலையங்களில் மணி கணக்கில் நின்று வாகன ஓட்டிகள் பெட்ரோல் நிரப்பி செல்கின்றனர். 

கொழும்பு நகரில் தினமும் 13 மணி நேரம் வரை மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது. மற்ற நகரங்களில் தினமும் 10 மணி நேரம் மின்வெட்டு அமல்படுத்தப் படுவதால் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர். 

இலங்கையில் பல்வேறு பகுதியில் மக்கள் ஆளும் கட்சிக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனிடையே பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க தவறியதற்காக அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டுமென எதிர்கட்சிகள், பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், இலங்கையில் அவசர நிலை பிரகடனத்தை அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சேஷ அறிவித்து இருந்தார்.

இந்நிலையில், இலங்கையில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நடைமுறையில் இருந்த அவசரநிலை வாபஸ் பெறுவதாக இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சே அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

declaration of emergence withdraw for srilanka govt


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->