11,000 பக்க அறிக்கை !!! நில முறைகேடு வழக்கில் சித்தராமையா குற்றமற்றவர்....
11000 page report Siddaramaiah innocent in land scam case
பெங்களூரு கர்நாடகாவின் முதல்- மந்திரி சித்தராமையாவின் மனைவி பார்வதிக்குச் சொந்தமான 3.16 ஏக்கர் நிலத்தைக் கடந்த2016 ஆம் ஆண்டு மைசூர் நகர மேம்பாடு ஆணையம் கையகப்படுத்தியது. இந்த நிலத்திற்குப் பதிலாக மைசூர்ப் பிரதான இடத்தில் 14 வீட்டு மனைகளைப் பார்வதிக்கு ஒதுக்கியது. மேலும், கையகப்படுத்திய நிலத்தின் மதிப்பை விட வழங்கப்பட்ட நிலத்தின் மதிப்பு பன்மடங்கு அதிகமாக இருந்ததைச் சுட்டிக்காட்டி குற்றச்சாட்டு ஒன்று எழுந்தது.

சித்தராமையாவின் மனைவி பார்வதி:
இதைத்தொடர்ந்து, சினேகமயி கிருஷ்ணா என்பவர் வீட்டு மனைகள் ஒதுக்கியதில் முறைகேடு இருப்பதாகக் கூறி பெங்களூர்ச் சிறப்பு கோர்ட்டில் வழக்கு ஒன்று தொடர்ந்தனர். மேலும் இது குறித்து முதல் மந்திரி சித்தராமையா மனைவி மீது மைசூர் லோக் ஆயுக்தா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதன் முடிவில் இறுதி அறிக்கையாக வருகிற 24-ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று பெங்களூரு சிறப்பு கோர்ட் லோக் ஆயுக்தா போலீசாருக்கு உத்தரவிட்டது. இந்நிலையில் நேற்று பெங்களூரு சிறப்பு கோட்டில் இந்த வழக்கு தொடர்பான இறுதி அறிக்கையில் லோக் ஆயுக்தா போலீசார்த் தாக்கல் செய்த 11,200 பக்கங்கள் கொண்ட அறிக்கையில் முதல் மந்திரி சித்தராமையா மனைவி பார்வதியிடம் இருந்து கையகப்படுத்தப்பட்ட 3.16 ஏக்கர் நிலத்திற்கு மாற்றாகத் தான் 14 வீட்டுமனைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லோக் ஆயுக்தா போலீசார்:
இதைத்தொடர்ந்து அதிகாரிகள் விதிமுறைகளை மீறி இருப்பதாகவும் கர்நாடக முதல் மந்திரி சித்ராமையா இந்த வழக்கில் குற்றமற்றவர் என்றும் லோக் ஆயுக்தா போலீசார்த் தெரிவித்தனர். இது தொடர்பான விசாரணை அறிக்கையைக் கோர்ட் ஏற்று கொண்டதுடன் இந்த அறிக்கைக் குறித்து பதிலளிக்குமாறு புகார்தாரர்ச் சினேகமயி கிருஷ்ணாவுக்கு லோக் ஆயுக்தா கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கின் விசாரணை வருகிற 24-ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவித்துள்ளது.
English Summary
11000 page report Siddaramaiah innocent in land scam case