கொடநாடு வழக்கில் சசிகலா, டிடிவி தினகரனுக்கு தொடர்பு! பகிர் கிளப்பிய முக்கிய புள்ளி.!! - Seithipunal
Seithipunal


முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் நிகழ்ந்த கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் திமுக அரசு மெத்தனப் போக்குடன் செயல்பட்டு வருவதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தமிழக முழுவதும் தமிழக அரசுக்கு எதிராக கண்டனம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதற்கு ஆதரவு தெரிவித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேனியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஓ.பன்னீர் செல்வத்துடன் கலந்து கொண்டார். அரசியல் ரீதியாக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் இந்த வழக்கில் அதிமுக மூத்த நிர்வாகிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும் பரவலாக பேசப்படுகிறது.

இந்த நிலையில் இன்று போயஸ் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா "கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் சசிகலா குடும்பத்தினருக்கும், டிடிவி தினகரனுக்கும் தொடர்பு இருக்கக் கூடும் என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது.

இதற்கு காரணம் கொடநாடு பங்களா ஜெயலலிதா அவர்களுக்கு சொந்தமானதாக இருந்தாலும், அதை கட்டுப்படுத்தும் மற்றும் நிர்வகிக்கும் அதிகாரம் சசிகலா மற்றும் அவர்களின் குடும்பத்தினரிடம்தான் இருந்தது. எனவே அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்த பங்களாவில் நடைபெற்ற இந்த சம்பவத்திற்கும் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் தொடர்பு இருக்க வாய்ப்புள்ளது. 

அதேபோன்று அதிமுகவை சேர்ந்த சில மூத்த நிர்வாகிகள் இவர்களின் தூண்டுதல் பெயரில் இந்த சம்பவத்தை அரங்கேற்று இருக்கலாம். ஜெயலலிதா அவர்களின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக முதன் முதலில் தர்மயுத்தம் நடத்தியவர் ஓ.பன்னீர்செல்வம். ஆனால் அவர் தற்பொழுது டிடிவி தினகரன் சேர்ந்து உள்ளார். அவர் ஏன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறித்து ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவும் தான் விளக்கம் அளிக்க வேண்டும்"என கூறியுள்ளார். தீபாவின் இத்தகைய கருத்து அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Deepa said that Sasikala and TTV Dhinakaran may be related in KodaNadu case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->