டெல்லி கணேஷ் மறைவு மிகுந்த மனவருத்தம் அளிக்கிறது!...மத்திய அமைச்சர் எல். முருகன் இரங்கல்!
Deeply saddened by delhi ganesh demise union minister l murugan condolence
நடிகர் டெல்லி கணேஷ் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் டெல்லி கணேஷ் இன்று காலமானார். அவரது உடல் சென்னை ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. டெல்லி கணேஷின் மறைவுக்கு திரைத்துறையினர் மற்றும் அரசியல் கட்சியினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மத்திய அமைச்சர் எல். முருகன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தமிழ்த் திரைப்படத் துறையின் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகரான திரு.டெல்லி கணேஷ் அவர்கள், உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி மிகுந்த மனவருத்தமளிக்கிறது.
தனது சிறந்த நடிப்பிற்காக, ‘கலைமாமணி விருது’ மற்றும் சிறந்த நடிகருக்கான விருது போன்ற விருதுகளை வென்றவர், 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார். தமிழ்ச் சினிமாவில் நடிக்கத் துவங்கும் முன்பு, இந்திய விமானப் படையிலும் பணியாற்றி நாட்டிற்கு சேவையாற்றியுள்ளார்.
இந்தச் சமயத்தில், அவரது குடும்பத்தாருக்கு எனது ஆறுதலும், இரங்கலும் தெரிவித்துக் கொள்வதோடு, அண்ணாரது ஆன்மா சாந்தியடைய கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன். ஓம் சாந்தி என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Deeply saddened by delhi ganesh demise union minister l murugan condolence