#BREAKING || மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கொரோனா.! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. இந்த கொரோனா பரவல் காரணமாக மத்திய, மாநில அமைச்சர்கள், முதலமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலருக்கும் நோய்த்தொற்று உறுதியாகி வருகிறது. 

இந்நிலையில், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதியாகி உள்ளது.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "எனக்கு லேசான கொரோனா நோய்க்கான அறிகுறிகள் இருந்தது. இதனையடுத்து எனக்கு எடுக்கப்பட்ட கொரோனா நோய்த்தொற்று பரிசோதனை முடிவில், நோய்த்தொற்று உறுதியாகி உள்ளது.

தற்போது நான் என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டேன். இதேபோல் அண்மைக்காலமாக என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும், தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு, பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Defence Minister Rajnath Singh Affected Corona


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->