திடீர் திருப்பம்.. அடுத்த கர்நாடக முதல்வர் யார்.? டி.கே சிவகுமார், சீதாராமையாவை அழைத்த டெல்லி தலைமை..!!
Delhi congress invited siddaramaiyaa and DKSivakumar to visit Delhi
கர்நாடக மாநில சட்டமன்ற பொது தேர்தலில் காங்கிரஸ் கட்சி 224 தொகுதிகளில் 135 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. எனினும் கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார் என்ற போட்டி முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே சிவகுமார் இடையே நிலவி வந்தது.
இந்த நிலையில் நேற்று பெங்களூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 135 எம்எல்ஏக்கள் மற்றும் 2 காங்கிரஸ் ஆதரவு சுயேட்சை எம் எல் ஏக்கள் பங்கேற்றனர்.
இந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கர்நாடக மாநிலத்தின் அடுத்த முதலமைச்சர் யார் என்பதை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் டெல்லி தலைமைக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் கர்நாடக மாநில முதலமைச்சர் குறித்தான அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் முதலமைச்சர் குறித்தான அறிவிப்பு இன்று வெளியாகவில்லை. இந்த நிலையில் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே சிவகுமார் இன்று டெல்லி செல்வார் என தகவல் வெளியானது. இந்த நிலையில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரின் டெல்லி பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது. உடல்நிலை சரியில்லாததால் அவர் தற்பொழுது வீடு திரும்பி உள்ளார்.
மேலும் அவசியத் தேவை என்றால் டெல்லி அழைக்கட்டும் என டி.கே சிவகுமார் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் காங்கிரஸ் தலைமை முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் டி.கே சிவகுமார் டெல்லி வருமாறு அழைப்பு விடுத்துள்ளது. இதனால் நாளை இருவரும் டெல்லி செல்ல உள்ளனர் என்ற தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது.
English Summary
Delhi congress invited siddaramaiyaa and DKSivakumar to visit Delhi