திமுக அலுவலகம் திறப்பு விழா : பாஜகவிற்கு அழைப்பு விடுத்த திமுக.!
Delhi DMK office opening ceremony DMK invite BJP
டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகத்தை தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் அவர்கள் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறந்து வைக்கவுள்ளார்.
ஏப்ரல் 2ஆம் தேதி காலை டெல்லி செல்லும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருப்பு விழா முடிந்த பிறகு இரவு மீண்டும் தமிழகம் திரும்புவார் என கூறப்படுகிறது. மேலும் இந்த விழாவில் கலந்து கொள்ள முக்கிய அரசியல் தலைவர்களுக்கு அழைப்புதல் விடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் டெல்லியில் உள்ள திமுக அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு அழைப்பிதழ் வழங்கினார். நேற்று காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Delhi DMK office opening ceremony DMK invite BJP