ஆம் ஆத்மி ஆட்சியில், 'டில்லியில் குடிநீர் இல்லை, ஆனால் ஆல்கஹால் கிடைக்கிறது'; மோடி குற்றச்சாட்டு..!
Delhi does not have drinking water but alcohol is available Modi alleges
டில்லி சட்ட சபை தேர்தல் பிப்ரவரி 05-ஆம் தேதி தேர்தல் நடைபெற்று, பிப்ரவரி 08-இல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. டெல்லியில் ஆட்சியை தக்க வைக்க ஆம் ஆத்மியும், 27 ஆண்டுகளுக்கு பின் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் பா.ஜ.,வும், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த இரு கட்சிகளை தவிர காங்கிரஸ், இடதுசாரிகள், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளும் தனித்து போட்டியிடுகின்றன.
இந்நிலையில் டில்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு குறித்து பிரதமர் மோடி ஆடியோ வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோவில், அவர் கூறியதாவது: டில்லியில் இலவச சுகாதார சேவைக்கான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை செயல்படுத்த நாங்கள் கோரிக்கை விடுத்தோம்.
ஆனால், அவர்கள் அதை செயல்படுத்த விரும்பவில்லை. இந்தத் திட்டத்தை செயல்படுத்தினால் பல நன்மைகள் உள்ளன என்று டில்லி மக்களுக்கு நான் சொல்ல விரும்புகிறேன். ஆனால் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் ஆம் ஆத்மி அரசு தடைகளை உருவாக்கினர் என்று அந்த ஆடியோவில் கூறியுள்ளார்.
அத்துடன் , பா.ஜ., நடுத்தர மக்களை இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகக் கருதுகிறது. நாட்டில், அனைத்து நவீன வசதிகளையும் நாங்கள் செய்து வருகிறோம். டில்லியில் குடிநீர் இல்லை. ஆனால் ஆல்கஹால் கிடைக்கிறது.
ஆம் ஆத்மி அரசு மீது, மக்கள் வெளிப்படையாக கோபத்தை வெளிப்படுத்துகிறார்கள், அவர்கள் கேள்வி கேட்கிறார்கள். வாக்குறுதிகளை ஏன் நிறைவேற்றவில்லை என மக்கள் கேட்கிறார்கள். ஆம் ஆத்மி கட்சி தினமும் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. ஆனால் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில்லை என்று மோடி அவர்களின் ஆடியோவில் மேலும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Delhi does not have drinking water but alcohol is available Modi alleges