கெஜ்ரிவால் ஜாமீனுக்கு தடை விதித்து டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு..! - Seithipunal
Seithipunal



மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான பண மோசடி வழக்கில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப் பட்டுள்ளார். இதையடுத்து இந்த வழக்கில் தன்னை ஜாமீனில் விடுவிக்குமாறு அவர் தாக்கல் செய்த மனுவை டெல்லியில் உள்ள விசாரணை நீதிமன்றம் விசாரித்தது. இதையடுத்து டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு கடந்த ஜூன் 20ம் தேதி ஜாமீன் வழங்கப் பட்டது.

இதையடுத்து டெல்லி திகார் சிறையில் உள்ள கெஜ்ரிவால் உடனடியாக வெளியே வருவார் என்று எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி அமலாக்கத் துறை டெல்லி உயர் நீதிமன்றத்தில் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கப் பட்டதற்கு மறுநாளே அதாவது ஜூன் 21 அவசரமாக மனு தாக்கல் செய்துள்ளது.

இதையடுத்து அமலாக்கத் துறையின் மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சுதிர் குமார் ஜெயின், விசாரணை நீதிமன்றத்தின் ஜாமீன் உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டு உள்ளார். முன்னதாக இந்த மனு மீதான விசாரணையின் முடிவில் நீதிபதி சுதிர் குமார் ஜெயின், "அமலாக்கத் துறை சமர்ப்பித்த பதிவை  விசாரணை நீதி மன்றம் சரியாக கவனிக்கவில்லை என்று தெரிகிறது. அமலாக்கத் துரையின் வாதத்தை ஏற்று இந்த ஜாமீன் உத்தரவை ரத்து செய்கிறேன்" என்று தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து கெஜ்ரிவால் தாக்கல் செய்துள்ள மேல் முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் நாளை (ஜூன் 26) விசாரணைக்கு வரவுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delhi High Court Banned Bail On Kejriwals Excise Policy Case


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->