#BigBreaking | பாஜகவிற்கு அதிர்ச்சி கொடுத்த ஆம் ஆத்மி | டெல்லி தேர்தல் வெற்றி/முன்னிலை நிலவரம்! - Seithipunal
Seithipunal


தலைநகர் டெல்லியில் மொத்தம் 250 மாநகராட்சி வார்டுகளுக்கு கடந்த 4ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. 

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜிர்வாலின் ஆம் ஆத்மி இந்த மாநகராட்சித் தேர்தலில் அதிக இடங்களைப் பெறும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளும் அதையே உறுதி செய்தன. 

இந்நிலையில், இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு முடிவுகள்/முன்னிலை குறித்து அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் ஆம் ஆத்மி முன்னிலை பெற்றது. பின்னர் பாஜக முன்னிலை பெற்றது. தற்போதைய நிலவரப்படி, ஆம் ஆத்மி  129, பாஜக 105, காங்கிரஸ் 11, மற்றவை 5 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன. 

கடந்த 15 ஆண்டுகளாக டெல்லி மாநகராட்சி பாஜக வசம் இருந்த நிலையில், இந்த முறை ஆம் ஆத்மி கைப்பற்றலாம் என்பதையே தேர்தல் முன்னிலை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delhi MCD Election Result 2022


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->