#BigBreaking | 15 வருட வரலாற்றை மாற்றி எழுத போகும் ஆம் ஆத்மி.! கணிப்புகளை பொய்யாக்கிய பாஜக! அதல பாதாளத்தில் காங்கிரஸ்! - Seithipunal
Seithipunal


#DelhiMCDPolls | AAP wins 89 seats and leads on 47, BJP wins 69 seats and leads on 32 seats as counting continues.

Congress wins 4, leads on 5 and Independent candidates win 1 and lead on 2.

Counting is underway for 250 wards.
கடந்த 4ஆம் தேதி தலைநகர் டெல்லியில் மொத்தம் 250 மாநகராட்சி வார்டுகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. 

இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு முடிவுகள்/முன்னிலை குறித்து அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் ஆம் ஆத்மி முன்னிலை பெற்றது. பின்னர் பாஜக முன்னிலை பெற்றது. பகல் 12 மணிக்கு மேல் ஆம் ஆத்மி கட்சியே முன்னிலை பெற்று வருகிறது. 

தற்போதைய நிலவரம் :

ஆம் ஆத்மி 89 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது, 47 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
பாஜக 69 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது, 32 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
காங்கிரஸ் 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது, 5 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
மற்றவை 1 இடத்தில் வெற்றி பெற்றுள்ளது, 2 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

கடந்த 15 ஆண்டுகளாக டெல்லி மாநகராட்சி பாஜக வசம் இருந்த நிலையில், இந்த முறை ஆம் ஆத்மி கைப்பற்றலாம் என்பதையே தேர்தல் வெற்றி/முன்னிலை நிலவரங்கள் தெரிவிக்கின்றன. 

அதே சமயத்தில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் பாஜக 80 இடங்கள் மட்டுமே வெற்றி பெரும் என்று சொல்லப்பட்ட நிலையில், அதை பொய்யாக்கி 100 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவதற்கான சூழ்நிலை உருவாகியுள்ளது. காங்கிரஸ் மூன்றாவது இடத்தை பிடுங்கும் என்று எதிர்பார்க்க படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Delhi MCD Polls Results 2022


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->