பிரதமர் பதவியேற்பு விழாவில் சிறுத்தையா? - டெல்லி போலீஸ் கூறுவது என்ன?!
Delhi Police Explained About Cheetah In PM Modis Swearingin Ceremony
நேற்று முன்தினம் டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பதவியேற்றுக் கொண்டுள்ளார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்கள் 72 பேரும் பதவியேற்றுக் கொண்டனர். பிரதமர் உட்பட அனைவருக்கும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
நேற்று முன்தினம் இரவு ஏழு மணிக்கு தொடங்கிய இந்த விழா இரண்டரை மணி நேரங்களை கடந்து சுமார் 10 மணி அளவில் முடிவடைந்தது. மிகவும் பிரம்மாண்டமாக உயர் பாதுகாப்புடன் நடந்த இந்த பதவியேற்பு விழாவிற்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் வந்து கலந்து கொண்டனர்.
இந்நிலையில் இந்த பதவியேற்பு விழாவில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அமைச்சர் குமாரசாமிக்கு பதவியேற்பு செய்து போது, அங்கு பின்புறம் ஒரு சிறுத்தை செல்வது போல் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் கலந்து கொண்ட, உயர் தர பாதுகாப்புடன் நடைபெற்ற இந்த விழாவில் இப்படி ஒரு மர்ம விலங்கு எப்படி வந்தது என்று கேள்வி அனைவருக்கும் எழுந்துள்ளது. மேலும் அது சிறுத்தை தானா அல்லது பூனையா என்றும் குழப்பம் நிலவுகிறது.
இந்நிலையில் டெல்லி போலீஸ் பதவியேற்பு விழாவின் போது குடியரசுத் தலைவர் மாளிகையில் தென்பட்ட விலங்கு சிறுத்தை அல்ல. அது வீட்டில் வளர்க்கும் பூனை தான் என்று விளக்கம் அளித்துள்ளது.
English Summary
Delhi Police Explained About Cheetah In PM Modis Swearingin Ceremony