நரேந்திர மோடியை தகுதி நீக்க கோரிய வழக்கு.. நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.!! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற பொது தேர்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளருக்காக பிரச்சாரம் செய்து வரும் பிரதமர் நரேந்திர மோடி கடவுள், அதன் வழிபாட்டுத்தளங்கள் மற்றும் மத ரீதியான கருத்துக்களை முன்வைத்து பெயரில் வாக்கு சேகரித்து வருவதால் அவரை ஆறு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதித்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என டெல்லி உயர் நதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சச்சின் தத்தா அமர்வின் முன்பு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் சற்று முன்னர் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த தீர்ப்பில் பிரதமர் நரேந்திர மோடியின் பிரச்சாரம் குறித்துமுற்றிலும் தவறான எண்ணத்தோடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என கூறி பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DelhiHC refused petition seeking disqualify Narendra Modi


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->