ஜனநாயக முறைப்படி நடந்த தேர்தல் : இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்த ஜெர்மனி!
Democratic Election Germany Greeted India
இந்தியாவில் பாராளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வந்தது. இறுதிக்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஜூன் 1ம் தேதி நடந்தது. இதையடுத்து ஜூன் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளன. இந்நிலையில் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் இந்தியா சிறப்பாக தேர்தலை நடத்தியிருப்பதாக வாழ்த்து தெரிவித்துள்ளன.
இது குறித்து ஜெர்மனியின் வெளியுறவு அலுவலகம் தனது எக்ஸ் தளத்தில், "உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா , தனது பாராளுமன்ற தேர்தலை மிகவும் சிறப்பாக நடத்தி முடித்துள்ளது. புதிய இந்திய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றவும், அந்நாட்டுடனான நமது நல்லுறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லவும் நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்" என்று பதிவிடப்பட்டுள்ளது.
இதேபோல் நைஜீரிய வெளியுறவு அமைச்சர் யூசுப் மைதாமாவும் தனது எக்ஸ் தளத்தில், "1.4 பில்லியன் மக்களில் 968 மில்லியனுக்கும் அதிகமான வாக்காளர்களைக் கொண்டு மொத்தம் 44 நாட்கள் நடந்த இந்தியாவின் தேர்தல் தான் தேர்தல் வரலாற்றிலேயே மிகப்பெரிய தேர்தல். ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய ஜனநாயக நாடக நாங்களும் உங்களுடன் இணைந்து கொள்கிறோம். உலகின் ஜனநாயக கோட்டையான இந்திய மக்களுக்கு எனது வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கருக்கும் தனது வாழ்த்துக்களை நைஜீரிய வெளியுறவுத்துறை அமைச்சர் யூசுப் மைதாமா தெரிவித்துள்ளார்.
English Summary
Democratic Election Germany Greeted India