துணை முதலமைச்சர் என்பது பதவியல்ல, பொறுப்பு - உதயநிதி ஸ்டாலின்! - Seithipunal
Seithipunal


33 அமைச்சர்களுடன் தமிழக அமைச்சரவை இயங்கி வரும் நிலையில், தற்போது தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

அதன்படி தமிழக துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பதவியேற்பார் என்று ஆளுநர் மளிகை நேற்று அறிக்கை வெளியிட்டது.  அதன் படி, துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பொறுப்பேற்கிறார்.  

இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில், நம் பெருமைமிகு தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக பணியாற்றுவதற்கான வாய்ப்பை நமக்கு அளித்த கழகத்தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களை, பொதுச்செயலாளர் - பொருளாளர் மற்றும் மாண்புமிகு அமைச்சர்களுடன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றோம்.

‘துணை முதலமைச்சர்’ என்பது பதவியல்ல, பொறுப்பு.. என்பதை உணர்ந்து, தமிழ்நாட்டு மக்களின் ஏற்றத்துக்காக, தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வகுத்து தந்த பாதையில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டலில், சக அமைச்சர் பெருமக்களோடு இணைந்து பணியாற்றுவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Deputy chief minister is not a position but a responsibility udayanidhi stalin


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->