தேவர் ஜெயந்தி விழா : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தேவர் நினைவிடத்தில் மரியாதை! - Seithipunal
Seithipunal


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று பசும்பொன்னில் நடைபெறும் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜையில் பங்கேற்க உள்ளார்.

இதற்காக  முதலமைச்சர் விமானம் மூலம் நேற்று  இரவு மதுரை வந்தடைந்தார். அப்போது அவருக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். முதலமைச்சர் வருகையையொட்டி மதுரை மாநகர், மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று டிரோன்கள், ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று காலை கோரிப்பாளையத்தில் உள்ள தேவரின் முழுஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுதினார். தொடர்ந்து மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

தொடர்ந்து கார் கார் மூலம் பசும்பொன் செலும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின், தேவர் நினைவாலயத்தில் மரியாதை செலுத்தவுள்ளார். மேலும் முன்னாள் முதலமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்,  அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்,  வி.கே.சசிகலா, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாஜக, காங்கிரஸ்  மற்றும் தேமுதிக உள்ளிட்ட  அரசியல் கட்சியினர் பங்கேற்று  மரியாதை செலுத்த உள்ளனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Devar jayanti celebration chief minister mk stalin honor at devar memorial today


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->