மதம் மாறியதால், எம்.எல்.ஏ ராஜா தகுதிநீக்கம்.! நீதிமன்றம் அதிரடி., விரைவில் இடைத்தேர்தல்.?!
devikulam MLA election cancelled by kerala court
கேரளாவில் பினராயி விஜயின் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் இடுக்கி மாவட்டம் தேவிகுளம் சட்டப்பேரவை தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வழக்கறிஞர் ஏ.ராஜா போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் இரண்டாவது முறையாக பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது.
அப்போது நடைபெற்று முடிந்த தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சியின் தேவிகுளம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக தமிழகத்தை சேர்ந்த ஏ.ராஜா வெற்றி பெற்றார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை விட 7848 வாக்குகளை அதிகம் பெற்று அவர் சட்டப்பேரவை உறுப்பினரானார். தொடர்ந்து சட்டப்பேரவையில் அவர் பதவியேற்ற போது தாய் மொழியான தமிழில் பேசி பதவியேற்றுக் கொண்டார்.
இத்தகைய நிலையில் எம்.எல்.ஏ ராஜா மதம் மாறியவர் என்ற காரணத்தால் தனி தொகுதியான தேவிகுளத்தில் போட்டியிட தகுதியற்றவர் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையில் இன்று கேரளா உயர் நீதிமன்றம் பட்டியல் இனத்தைச் சேர்ந்த எம்எல்ஏ ராஜா மதம் மாறிய பின்னர் அவர் தனி தொகுதியில் போட்டியிட தகுதி இல்லாதவர் என்று கூறி தேவிகுளம் சட்டப்பேரவை தொகுதியில் நடைபெற்ற தேர்தல் செல்லாது என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து தேவிகுளம் சட்டப்பேரவை தொகுதி காலியாகியுள்ளது. விரைவில் இதற்கு இடைத்தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
devikulam MLA election cancelled by kerala court