கோடநாடு வழக்கில் திடீர் ட்விஸ்ட்! தனபால் மன நோயாளியா? புகார் மனுவில் பகீர் தகவல்! - Seithipunal
Seithipunal


மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில் அரங்கேறிய கொலை கொள்ளை சம்பவத்தின் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட கார் ஓட்டுநர் கனகராஜ் சேலத்தில் நடந்த சாலை விபத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் இந்த வழக்கு தற்போது தமிழ்நாடு சிபிசிஐடி போலீசாரால் விசாரிக்கப்பட்டு வருகிறது.

கனகராஜ் சகோதரர் தனபால் சிறையில் இருந்து ஜாமீனில் தற்போது வெளிவந்துள்ள நிலையில் சில நாட்களுக்கு முன்பு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கொடநாடு வழக்கில் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டினார்.

மேலும் தனது சகோதரர் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழக்கவில்லை என்றும் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டதாகவும் புகார் தெரிவித்திருந்தார். இதற்கிடையே வரும் செப்டம்பர் 14ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு தனபாலுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

அரசியல் வட்டாரத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் இந்த வழக்கில் திடீர் திருப்பமாக கனகராஜன் சகோதரர் தனபாலிடம் எந்த ஆதாரமும் இல்லை என அவருடைய மனைவி செந்தாமரைச்செல்வி தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனபாலின் மனைவி செந்தாமரைசெல்வி புகார் மனு அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் "என்னுடைய கணவர் தனபாலால் எனக்கும், என்னுடைய பிள்ளைகளின் உயிருக்கும் ஆபத்து இருக்கிறது. அவர் ஒரு மன நோயாளி, அந்தப் பிரச்னைக்காக நீண்ட நாள்களாக மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.

சிலரின் தூண்டுதலின் பேரில் கொடநாடு வழக்கு தொடர்பாக தேவையில்லாத பொய்களைக் கூறி வருகிறார். இதுகுறித்து தட்டி கேட்டதற்கு, என்னையும் குழந்தைகளையும் அடித்து துன்புறுத்துகிறார். அது மட்டுமல்லாமல் இவர் சிறையில் இருந்தபோது ஓபிஎஸ் ஆதரவாளர் குருமூர்த்தி சந்திக்க வந்திருந்தார். அவர் "எந்த உதவி என்றாலும் கேளுங்கள், அண்ணன் உங்களைப் பார்த்து வரச் சொன்னார்" என்று அவரிடம் கூறினார்.

இந்த நிலையில்தான், இவர் சிறையிலிருந்து வெளியில் வந்தும் தேவையில்லாததை பேசி வருகிறார். இதில் எனக்கு உடன்பாடு கிடையாது. இவரால் எனது குடும்பம், என்னுடைய குழந்தைகளின் வாழ்க்கை தான் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, என்னுடைய கணவரால் எனக்கும் என்னுடைய குழந்தைகளுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில், பாதுகாப்பு வழங்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார். 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் "இதுவரை கொடநாடு சம்பவம் குறித்து என்னிடம் எதுவும் கூறியது இல்லை. யாரோ தூண்டி விட்டு தான் இவ்வாறு பேசி வருகிறார். கொடநாடு வழக்கு தொடர்பாக எந்த ஆதாரமும் அவரிடம் இல்லை. அவர் பேசுவதற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

கனகராஜ் இறப்பதற்கு 6 மாதங்களுக்கு முன்பு வரை இருவரும் பேசிக் கொள்ளாமல் இருந்தது மட்டுமே எனக்கு தெரியும்" என செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.வரும் செப்டம்பர் 14ஆம் தேதி சிபிசிஐடி போலீசார் முன்பு தனபால் ஆஜராகி விளக்கம் அளிக்க உயர்ந்த நிலையில் அவருடைய மனைவியே இவ்வாறு புகார் அளித்திருப்பது பிறந்தநாள் வடக்கில் திடீர் திருப்பமாக அமைந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dhanapal wife complaint against him who related in KodaNadu case


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->