ஏழ்மையில் தவித்த பாமகவின் இஸ்லாமிய தொண்டருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பாமக எம்.எல்.ஏ., எஸ்பி வெங்கடேஷ்வரன்.! குவியும் பாராட்டு.!
DHARMAPURI MLA HELP TO Poor PMK member
பாட்டாளி மக்கள் கட்சியின் சிறுபான்மை நல பிரிவில் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்த தொண்டர் ஒருவருக்கு, தர்மபுரி பாமக சட்டமன்ற உறுப்பினர் எஸ்பி வெங்கடேஸ்வரன் அவர்கள், தமிழக அரசின் மூலம் இலவச வீட்டு மனை பட்டா பெற்றுக் கொடுத்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியில் கடந்த 20 ஆண்டுகளாக பயணித்து வரும் ஷானவாஸ் என்ற தொண்டர், மிகவும் ஏழ்மை நிலையில் இருந்து வந்துள்ளார். ஏழ்மை நிலையில் இருந்தபோதும் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியின் தீவிர தொண்டராக அவர் பணியாற்றி வந்துள்ளார்.
பாமகவின் பல்வேறு போராட்டங்களில் ஷானவாஸ் பங்கேற்றது மட்டுமில்லாமல், அதற்காக கைதும் செய்யப்பட்டுள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலில் தர்மபுரி சட்டமன்றத் தொகுதியின் பாமக வேட்பாளர் எஸ் பி வெங்கடேஷ்வரன் வெற்றி பெறுவதற்காக தொடர்ந்து களத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில், பாமக பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில சிறுபான்மை நல செயலாளர் முனைவர் ஷேக் முகைதீன் அவர்கள், ஷானவாஸ்-ன் ஏழ்மை நிலை குறித்து, தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்பி வெங்கடேஸ்வரன் அவர்களிடம் எடுத்துரைத்துள்ளார்.
மேலும் அவருக்கு தமிழக அரசால் இலவச வீட்டுமனை பட்டா பெற்று அவர் வாழ்க்கையில் முன்னேற உதவ வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்துள்ளார்.
இந்நிலையில், இன்று தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்பி வெங்கடேஸ்வரன் அவர்கள் தமிழக அரசின் மூலமாக 2.5 சென்ட் இலவச வீட்டு மனை இடத்தை, அவருக்கு பத்திர பதிவு செய்து, ஷானவாஸை நேரில் வரவழைத்து வழங்கியுள்ளார்.
இதனை பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில சிறுபான்மை நல செயலாளர் முனைவர் ஷேக் முகைதீன் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
English Summary
DHARMAPURI MLA HELP TO Poor PMK member