பாஜகவில் யாருக்குமே அறிவு இருக்காதா..!! டென்ஷன் ஆன திமுக எம்.பி செந்தில்குமார்..!!
Dharmapuri mp SenthilKumar said No one in BJP has any knowledge
தமிழக அரசின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரும் முதல்வர் ஸ்டாலின் மகனான உதயநிதி ஸ்டாலின் சில தினங்களுக்கு முன்பு ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் அமைச்சராக பதவி ஏற்று கொண்டார். அவர் பதவியேற்கும் பொழுது பதவியேற்பு பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் ஆகியவற்றை வாசித்தார். அந்தப் பதவியேற்பு பிரமாணத்தில் இந்திய அரசு என குறிப்பிட்டு பதவி ஏற்று கொண்டார்.
மத்திய அரசை திமுகவைச் சேர்ந்த நிர்வாகிகளும் தலைவர்களும் ஒன்றிய அரசு என பேசி வரும் நிலையில் பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் பக்கத்தில் "'உதயநிதி ஸ்டாலின் எனும் நான்' என்று அமைச்சராக உறுதி மொழி ஏற்று கொண்டவர் "ஒன்றிய அரசின்" சார்பாக என்று எந்த இடத்திலும் கூறாமல், இந்திய அரசு என்று உறுதி மொழி ஏற்று கொண்டது ஏன்? ஓ!! அப்படி குறிப்பிட்டிருந்தால் அமைச்சராகியிருக்க முடியாது அல்லது தகுதி இழக்க நேரிடும் என்று தெரியுமோ?" என விமர்சனம் செய்திருந்தார்.
நாராயணன் திருப்பதியின் விமர்சனத்திற்கு பதிலடி தரும் விதமாக திமுகவை சேர்ந்த தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் "பாஜக வில் யாருக்குமே அறிவு இருக்காதா 🤔, சரி மூன்றாம் வகுப்பு class எடுப்போம். நாட்டின் பெயர்-இந்தியா, மாநிலத்தின் பெயர்-தமிழ் நாடு, Union Govt-ஒன்றிய அரசு, State Govt-மாநில அரசு, Mr.நாராயணா நாட்டின் பெயரால் தான் பதவி ஏற்ப்பு..! புறியுதோ, சரி இப்போ திரும்ப சொல்லுங்க பார்க்கலாம்" என கலாய்க்கும் விதமாக பதில் அளித்துள்ளார். அவரின் இத்தகைய பதிலடி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமாரின் ட்விட்டர் பதிவில் உள்ள எழுத்து பிழையை இணையதள வாசிகள் கிண்டல் செய்து வருகின்றனர்.
English Summary
Dharmapuri mp SenthilKumar said No one in BJP has any knowledge