எல்லாரும் தர்மபுரி வாங்க.. சஸ்பென்ஸ் உடைத்த கோ.க‌ மணி.!! கொண்டாட்டத்தில் பாட்டாளிகள்.!! - Seithipunal
Seithipunal


பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவ தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான கோ.க மணி தனது சமூக வலைதள பக்கத்தில் "தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியின் தேசிய ஜனநாயக கூட்டணி பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றி வேட்பாளர் திருமதி சௌமியா அன்புமணி 25.3.2024 வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.

நாளை பகல் 11:00 மணிக்கு தர்மபுரி (தொப்பூர்) அடுத்துள்ள சுங்கசாவடியிலிருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக, தர்மபுரி நால்ரோடு வருகைதந்து , அங்கிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று பிற்பகல் 1.00 மணி முதல் 2.00 மணிக்குள் வேட்புமனுதாக்கல் செய்ய உள்ளார்.

வேட்புமனுதாக்கல் செய்யும் நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சியினர் உள்ளிட்ட தோழமைக் கட்சியினர் கலந்துகொள்ள வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

வேட்புமனு தாக்கல் செய்த பிறகு தர்மபுரி கோட்டை கோவில் அருகில் டி.என்.வி ராஜ் திருமண அரங்கில் மாலை 3.00 மணிக்கு வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.

வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்ச்சியிலும், வேட்பாளர் அறிமுக கூட்டத்திலும் பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி எம்.பி அவர்களும் நானும் (ஜி.கே.மணி) பா.ம.க மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை நிர்வாகிகளும், அணி பொறுப்பாளர்களும், தோழமைக் கட்சியினரும் கலந்துகொள்ள உள்ளனர். 

இந்நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சியினரும், தோழமைக் கட்சியினரும், மிகப்பெரிய அளவில் பெருந்திரளாக கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்"என பதிவிட்டுள்ளார். சட்டமன்ற தலைவரும் பாமக எம்எல்ஏ மாண கோகமணியின் இந்த அறிவிப்பால் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளும் தொண்டர்களும் உற்சாகமடைந்துள்ளனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dharmapuri Pmk candidate sowmiya anbumani nomination files tomorrow


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->