தங்கர்பச்சானை ஆதரித்து இயக்குனர் மோகன் ஜி பிரச்சாரம்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் மக்களவை தேர்தல் வரும் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தேர்தலுக்கு இன்னும் 4 நாட்கள் உள்ள நிலையில், அனைத்து கட்சி வேட்பாளர்களும் அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமகவிற்கு காஞ்சிபுரம், ஆரணி, கடலூர், அரக்கோணம், விழுப்புரம், திண்டுக்கல், சேலம், தருமபுரி, மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி என 10 தொகுதியில் ஒதுக்கப்பட்ட உள்ளது. கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடும் இயக்குனர் தங்கர்பச்சானை ஆதரித்து இயக்குனர் மோகன் ஜி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இயக்குனர் மோகன் ஜி நாடககாதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் திரெளபதி. அத்திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் இயக்குனர் மோகன் ஜி. இயக்குனர் மோகன் ஜி பாமக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருவது சமூகவலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அவர் எப்போது வேண்டுமானாலும் பாமகவில் இணையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Director thangarbachan supported director mohan g


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->