தமிழ் திரை வரலாற்றில் மற்றொரு 'மணி'மகுடம் பொன்னியின் செல்வன் - பிரபல இயக்குனர் பாராட்டு! - Seithipunal
Seithipunal


பிரபல எழுத்தாளர் கல்கி எழுதிய நெடும் நாவலான பொன்னியின் செல்வன் நாவலை தழுவி, இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில், நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பிரகாஷ் ராஜ், பார்த்திபன், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்டவர்கள் நடித்து வெளியாகி உள்ள திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'.

இந்த திரைப்படத்திற்கு விமர்சன ரீதியாகவும், வசூல் (ரூ.100 கோடி) ரீதியாகவும் தமிழகத்தில் பெரும் வரவேற்பு கிடைத்த நிலையில், நாடு முழுவதும் உலகம் முழுவதும் நல்ல பாராட்டை பெற்றுள்ளது.

இந்த திரைப்படம் குறித்து பல்வேறு திரை பிரபலங்களும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து, தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் பொன்னின் செல்வன் திரைப்படத்திற்கு தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

அவரின் அந்த வாழ்த்து பதிவில், "வாசிப்பு அனுபவத்தின் உச்சமான 'பொன்னியின் செல்வன்' நாவல் மணி சாரின் காட்சி வடிவில் திரை அனுபவத்தின் உச்சமாக மெருகேறியுள்ளது. நடிப்பு, இசை, ஒளிப்பதிவு, கலை என அத்தனை பரிணாமங்களிலும் உச்சம் தொட்ட இத்திரைப்படம் தமிழ் திரை வரலாற்றில் மற்றொரு 'மணி'மகுடம்.

குடும்பத்துடன் திரையரங்குகளுக்கு சென்று இந்த காவியத்தை அனுபவித்து வருவதே இப்படக்குழுவுக்கு நாம் செய்யும் மரியாதையாகும்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

director vignesh sivan wish Ponniyin Selvan team


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->