திடீர் திருப்பம்.. எனக்கு இல்லனா நீங்க தான் கர்நாடக முதல்வர்.. டி.கே சிவகுமார் போட்ட குண்டு.!! - Seithipunal
Seithipunal


கர்நாடக அரசியல் அடுத்த யார் முதல்வர் என்ற போட்டி கடந்த 5 நாட்களாக நிலவி வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியை இன்று காலை கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே சிவகுமார் ஆகியோர் தனித்தனியாக சந்தித்தனர். ராகுல் காந்தி சித்தாராமையா சந்திப்புக்கு பிறகு கர்நாடகாவின் அடுத்த முதல்வர் சித்தராமையா தான் என்பது கிட்டத்தட்ட உறுதியானது.

இதன் காரணமாக கர்நாடகாவில் பதவி ஏற்பு விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே சித்தராமையாவுக்கு பிறகு ராகுல் காந்தியை சந்தித்த டி.கே சிவகுமார் எனக்கு முதல்வர் பதவி தான் வேண்டும் எனவும், துணை முதல்வர் பதவி வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு முதல்வர் பதவி வழங்காத பட்சத்தில் எம்எல்ஏவாக தொடர விரும்புவதாகவும், அமைச்சரவையில் கூட எனக்கு பதவி வேண்டாம் எனவும் ராகுல் காந்தியிடம் தெரிவித்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது. ராகுல் காந்தியை சந்தித்த கையோடு காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேபை மீண்டும் சந்தித்த டி.கே சிவகுமார் தன்னை முதல்வராக்க வேண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அவ்வாறு நடக்காத பட்சத்தில் நீங்களே முதல்வர் பதவியை ஏற்றுக் கொள்ளுங்கள் என மல்லிகார்ஜுன கார்கேவிடம் டி.கே சிவக்குமார் கோரிக்கை வைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இதன் காரணமாக கர்நாடக மாநில முதல்வர் தேர்வு செய்வதில் இழுபறி நீடித்து வருவதாக டெல்லி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனால் கர்நாடக மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற அறிவிப்பு இன்று இரவு அல்லது நாளை வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பரபரப்பான கர்நாடக அரசியல் களத்தில் அடுத்த முதல்வர் யார் என்ற போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் மல்லிகார்ஜுன கார்கேவை முதல்வராக பதவி ஏற்றுக்கொள்ளுமாறு டி.கே சிவகுமார் கூறியிருப்பது பலரை அதிர்ச்சியிலும், ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DKSivakumar requests Mallikarjuna Karke take over as CM of Karnataka


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->