ஆளுங்கட்சியினர் துணையோடு கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது - பிரேமலதா விஜயகாந்த்! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 65 பேர் உயிரிழந்தனர். இது போன்ற உயிரிழப்புகள் இனி ஏற்படாமல் இருக்கவும், கள்ளச்சாராயம் விற்பனை செய்வோரை கடுமையாகத் தண்டிக்கும் வகையில் தமிழக சட்டப்பேரவையில் மதுவிலக்கு சட்டத்தில் திருத்த மசோதா கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

முன்னதாக சட்டப்பேரவையில் இந்த சட்ட மசோதா மீதான விவாதத்தில் பேசிய அமைச்சர் துரைமுருகன், "பக்கத்து மாநிலங்களில் மது விற்பனை செய்யும் போது, இங்கு எப்படி விற்பனை செய்யாமல் இருக்க முடியும். எரியும் நெருப்பு வளையத்தில் எப்படி கற்பூரம் எரியாமல் இருக்க முடியும்.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று அனைவரும் கோரிக்கை வைக்கின்றனர்.‌ ஆனால், கடுமையாக உழைப்பவனுக்கு மது தேவைப்படுகிறது. இதனால் தான் டாஸ்மார்க் கடைகள் நடத்தப்படுகிறது. 

டாஸ்மார்க் கடைகளில் விற்கப்படும் மதுவில் பெருமளவில் கிக் இல்லை என்பதால் தான் பெரும்பாலானோர் கள்ளச்சாராயத்தை விரும்புகிறார்கள். இதனால்தான் அவர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து கள்ளச்சாராயம் அருந்துகிறார்கள்" என்று அமைச்சர் துரைமுருகன் பேசி இருந்தார்.

அமைச்சர் துரைமுருகனின் இந்த பேச்சுக்கு பல்வேறு தலைவர்களும் கடும் கண்டனத்தை தெரிவித்து வரும் நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த தெரிவிக்கையில், "டாஸ்மாக்கில் விற்கப்படும் மதுபானத்தில் கிக் இல்லாததால் தான் மக்கள் கள்ளச்சாராயத்தை வாங்கி அருந்துவதாக அமைச்சரே கூறியது மிகவும் கண்டனத்துக்குரியது. 

கல்வராயன் மலையில் ஆளும் கட்சியினரின் ஆதரவோடுதான் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது. ஒட்டுமொத்த மக்களையும் குடிகாரர்களாக மாற்றியது அரசாங்கம் தான்.

2023-ஆம் ஆண்டில் கள்ளச்சாராயத்தால் 22 பேர் உயிரிழந்தனர். ஆனால் அரசு இப்பொழுது தான் கண் விழித்துள்ளது. தமிழ்நாட்டில் கள்ளச் சாராயத்தால் இனி ஒரு உயிரிழப்பு கூட நடக்கக் கூடாது. தற்போது நடந்த கள்ளக்குறிச்சி விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு இந்த புதிய சட்டம் பொருந்துமா? அவர்கள் இந்த சட்டத்தின்படி தண்டிக்கப்படுவார்களா? என்பதை தமிழக அரசு விளக்கவேண்டும்.

கள்ளச்சாராயம் குடிப்பவர்கள் தாங்களே பார்த்து திருந்தினால் தான் உண்டு. இவர்களை வேறு யாராலும் திருத்த முடியாது. விட்டில் பூச்சிகள் தானாகவே விளக்கில் விழுந்து இறந்து விடுவதைப் போல, அவர்கள் கள்ளச்சாராயத்தில் விழுந்து இறந்து விடுகிறாா்கள். எனவே நாம் நடந்து முடிந்ததை மறந்து, நடக்கப் போவதை பார்ப்போம்" என்று பிரேமலதா விஜயகாந்த தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMDK Premaladha Vijayakanth Say DMK Support to kallasarayam Culprits


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->