இதுதான் முடிவு! ஆனால், இது பாஜகவின் கோரிக்கையாச்சே... தர்மபுரியில் பிரேமலதா விஜயகாந்த் கொடுத்த ஷாக்! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 65க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம், தமிழக முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

மெத்தனால் கலந்த சாராயத்தை அருந்திய 200க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகள் அனுமதிக்கப்பட்ட நிலையில், 65க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும் பலருக்கு கண் பார்வை பறிபோனதாகவும், சிலருக்கு உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டதுள்ளதாகவும், 100க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த கள்ளச்சாராய விவகாரத்தில் தமிழக அரசின் அலட்சியமே காரணம் என்றும், தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என்றும், பாமக உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தன.

அதே சமயத்தில் பாஜக தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த கூறினாலும், டாஸ்மார்க் கடைகளுக்கு பதிலாக தமிழகத்தில் கல்லு கடைகளை திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது.

மேலும், கள்ளுக்கடை ஒன்றே கள்ளச்சாராயத்துக்கு முடிவு கட்டும் என்றும், வருகின்ற 2026 சட்டமன்ற பொது தேர்தலில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் போது, தமிழகத்தில் கள்ளுக்கடைகள் திறக்கப்படும் என்ற ஒரு வாக்குறுதியும், அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அண்மையில் தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், தர்மபுரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு கள்ளுக்கடைகளை திறக்க வேண்டும் என்று, தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

மேலும், கள்ளுக்கடைகளை திறப்பதால் விவசாயிகள் பயன்பெறுவார்கள், கள்ளச்சாராயத்தால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படாது என்றும் தெரிவித்தார். 

மேலும், திமுக அரசின் நிலைப்பாடு அடுத்த தேர்தலை நோக்கி தான் உள்ளதாகவும், அடுத்த தலைமுறை பற்றியோ, எதிர்கால தமிழகத்தைப் பற்றியோ சிந்திக்க கூடிய அளவில் திமுக அரசின் செயல்பாடுகள் இல்லை என்றும், பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMDK Premalatha Vijayakanth Tasmac Kallukadai TN Govt


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->