பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு அப்துல்கலாம் பெயர் - பிரதமர் மோடிக்கு பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை!
DMDK requests Prime Minister Modi new Pamban railway bridge Abdul Kalam name
முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் பெயரை பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு சூட்ட வேண்டும் என்று, தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்த அவரின் அறிக்கையில், “ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தைப் பாரத பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் மாதம் 6ம் தேதி திறக்க உள்ளார். பாம்பன் பாலம் வரலாற்று சிறப்பு மிக்கதாக இருக்கிறது.
ஆகவே, பாம்பன் பாலத்திற்கு ராமேஸ்வரத்தைப் பூர்வீகமாகக் கொண்டு பிறந்து, வளர்ந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பெயரை புதிய பாம்பன் பாலத்திற்கு மத்திய அரசு அறிவிக்க வேண்டும்” என்று தேமுதிக சார்பாக மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் ஒரு கோரிக்கையாக வைக்கிறேன்.
பிரதமர், ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய பாலத்தைத் திறக்க வரும் நிலையில் அந்த பாலத்திற்கு அப்துல் கலாம் பெயரைச் சூட்டி இஸ்லாமியர்களுக்கும், ராமேஸ்வரத்திற்கும் பாரம்பரியம் மிக்க நமது பாம்பன் பாலத்திற்கும் பெருமையைச் சேர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
ரம்ஜான் விரதம் இருக்கும் அனைத்து இஸ்லாமியர்களுக்கும் APJ அப்துல்கலாமின் பெயரை வைப்பதன் மூலம் மிகப்பெரிய ஒரு கவுரவத்தை இந்த ரம்ஜான் நேரத்தில் இஸ்லாமியர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக இருக்கும்" என பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
DMDK requests Prime Minister Modi new Pamban railway bridge Abdul Kalam name