தேமுதிக பீனிக்ஸ் பறவை போல் மீண்டெழுந்து இமாலய வெற்றி பெரும் - தேமுதிக தலைவர் விஜயகாந்த்.! - Seithipunal
Seithipunal


தேமுதிக பீனிக்ஸ் பறவை போல மீண்டும் எழுந்து வருங்காலத்தில் இமாலய வெற்றி பெறும் என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகளைக் கண்டு தேமுதிக நிர்வாகிகள் துவண்டு விடாதீர்கள், கவலைப்படாதீர்கள் என விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் இறந்து விட்டால் அந்த கட்சி நபரரையே சட்டமன்ற உறுப்பினராக அறிவியுங்கள். எதற்கு கண்துடைப்பு நாடகம் என்று கூறியுள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகள் அனைவரும் எதிர்பார்த்த ஒன்றுதான். தேர்தல் பிரச்சாரம் தொடங்கியது முதலே வாக்கிய எண்ணிக்கை நடைபெற்ற நாள் முதல் ஈரோடு கிழக்கு தொகுதியில் பண மழை பொழிந்தது. எந்த தொகுதியிலும் நடைபெறாத வகையில் வாக்காளர்களை ஆடுகளைப் போல பட்டியில் அடைத்து வைத்த கொடூரம் அரைங்கேறியது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டாலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த தேர்தலில் ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டது. இது ஜனநாயகரீதியில் நடைபெற்ற தேர்தல் அல்ல முழுக்க முழுக்க பணத்தையே நம்பி நடைபெற்ற தேர்தல். இனிமேல் எந்த தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மரணம் அடைகிறாரோ அந்த கட்சியில் உள்ள ஒரு நபரையே சட்டமன்ற உறுப்பினராக அறிவித்து விடுங்கள்.

மேலும், இடைத்தேர்தலில் இரவு, பகல் பாராமல் உழைத்த நமது நிர்வாகிகள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஈரோடு இடைத்தேர்தல் முடிவுகளை கண்டு நமது கழக நிர்வாகிகள் துவண்டு விடாதீர்கள் கவலைப்படாதீர்கள். பீனிக்ஸ் பறவை போல மீண்டும் எழுந்து வருங்காலத்தில் இமாலய வெற்றி பெறுவோம் என்றும் தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும் என விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMDK vijayakant speech about erode by election


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->