விஜயகாந்த் பிறந்தநாள்! மூன்று முக்கிய அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட பிரேமலதா விஜயகாந்த்! - Seithipunal
Seithipunal


தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் பிறந்த நாளுக்கு பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல் உள்ளிட்டவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில், தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்தின் 72வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, விஜயகாந்த் நினைவிடத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா மரியாதை செலுத்தியுள்ளார்.

மேலும், தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் சிலையை தெரிந்து வைத்த பிரேமலதா, இருந்தாலும் மறைந்தாலும் அன்னதானத்தை கொடுத்தவர் கேப்டன் விஜயகாந்த். எனவே, விஜயகாந்த் பிறந்த நாள் வறுமை ஒழிப்பு தினமாகவும், அன்னதான தினமாகவும் கடைபிடிக்கப்படும் என்று அறிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி,

இன்று முதல் தேமுதிக தலைமை அலுவலகத்தின் பெயர் கேப்டன் ஆலயம் என அழைக்கப்படும். 

விஜயகாந்த் பெயரின் புதிதாக யூ டியூப் சேனல் ஒன்றும் தொடங்கப்பட உள்ளதாக பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMDK Vijayakanth 72 BD Premalatha Vijayakanth Announce


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->