2026 தேர்தல்: திமுகவின் தேர்தல் வியூகத்தை அமைக்கும் ராபின் சர்மாவின் ஷோ டைம் கன்சல்டன்ஸி! - Seithipunal
Seithipunal


2021 ஆம் ஆண்டு சட்டமன்ற பொது தேர்தலில் திமுகவுக்கு தேர்தல் வியூகங்கள் மற்றும் பிரச்சார யுக்திகளை பிரபல அரசியல் நிபுணர் பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஐபேக் நிறுவனம் மேற்கொண்டதது.

திமுக அந்த தேர்தலில் அமோக வெற்றியை பெற்று தமிழகத்தில் ஆட்சி அமைக்க, பின்னர், ஐபேக் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் தனது சொந்த மாநிலத்தில் அரசியல் கட்சியை தொடங்கி காலத்தில் இறங்கி ஆட்சியை பிடிக்கும் இலக்கோடு செயல்பட்டு கொண்டு இருக்கிறார்.

அவரின் பணியாற்றிய பலரும் தற்போது அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆலோகராகவும், வியூன்களை வகுப்பவர்களாகவும் வளர்ந்து உள்ளனர்.

கடந்த மக்களவை பொதுத்தேர்தலில் திமுகவுக்கு 'பென் டீம்' திமுகவிற்காக களமிறங்கி பணியாற்றிய நிலையில், வரும் 2026  சட்டமன்ற பொதுத்தேர்தலுக்காக ராபின் சர்மாவின் SHOWTIME CONSULTANCY நிறுவனத்துடன் திமுக ஒப்பந்தம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

யார் இந்த ராபின் சர்மா?

ராபின் சர்மாவின் SHOWTIME CONSULTANCY நிறுவனம், ஆந்திராவில் தற்போது ஆட்சியை பிடித்துள்ள சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கு தேர்தல் யுக்திகளை உருவாக்கி வழங்கி உள்ளது.

மேலும், மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சிக்கும், மகாராஷ்டிராவில் சிவசேனா ஏக்நாத் ஷிண்டே பிரிவுக்கும் தேர்தல் வியூகங்களை ராபின் சர்மாவின் SHOWTIME CONSULTANCY நிறுவனம் தேர்தல் யுக்திகளை உருவாக்கி வழங்கி உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK 2026 Election MK Stalin Prashant Kishor SHOWTIME CONSULTANCY Robin


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->