விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலை!
DMK candidate Aniyur Siva is leading
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலை வகிக்கிறார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக மற்றும் தேமுதிக புறக்கணிப்பதாக அறிவித்தது. இதனால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மும்முனை போட்டு நிலவும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திமுக-பாமக இடையே நேரடி போட்டி நிலவியது. பாமக சார்பில் சி.அன்புமணி, திமுக சார்பில் அன்னியூர் சிவா வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மொத்தம் 29 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் போட்டியிட்டு உள்ளனர். விக்கிரவாண்டி இடைதேர்தலில் மொத்தம் 1,96,495 பேர் வாக்களித்துள்ளனர். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வாக்கு பதிவு சதவீதம் 82.47 ஆகும்.
இந்தநிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இந்தநிலையில், முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில், திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 8564 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். பாமக வேட்பாளர் சி.அன்புமணி 3096வாக்குகளை பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா 431 வாக்குகளை பெற்றுள்ளார்.
English Summary
DMK candidate Aniyur Siva is leading