தமிழக அமைச்சரவை மாற்றம் உறுதியானது - முதலமைச்சர் ஸ்டாலின் பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்ள நிலையில், சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் தெரிவிக்கையில், முதலீடுகளை ஈர்க்க வெளிநாட்டு பயணங்களை நான் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறேன். வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டதால் தமிழ்நாட்டிற்கு பல்வேறு முதலீடுகள் கிடைத்துள்ளன.

கடந்த மூன்று ஆண்டுகளில் 872 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.

இந்த அமெரிக்க பயணத்திலும் பல்வேறு ஒப்பந்தங்கள் முதலீடுகளை ஈர்த்து பல்வேறு ஒப்பந்தங்கள் போடப்படும் என்று நம்பிக்கை வைத்து இந்த பயணத்தை மேற்கொள்கிறேன் என்ற முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்தார்.

 இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களின் சில கேள்விகளுக்கு பதில் அளித்தார் முதலமைச்சரும் மு க ஸ்டாலின்.

அதில், அமெரிக்கப் பயணத்திற்குப் பிறகு தமிழக அமைச்சரவைகள் மாற்றம் இருக்குமா என்ற செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

இதற்கு பதில் அளித்த முதலமைச்சர் மு க ஸ்டாலின், மாற்றம் ஒன்றுதான் மாறாதது. Wait and see என்ற தெரிவித்தார்.

முதலமைச்சரின் இந்த பதில் மூலம் தமிழக அமைச்சரவை மாற்றப்படுவது உறுதியாகி உள்ளது.

மேலும் ஏற்கனவே வெளியான தகவலின் படி புதிய இளம் அமைச்சர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். துணை முதலமைச்சர் ஆக உதயநிதி ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்படவும் வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK CM MK Stalin Tamil Nadu cabinet change song


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->