கருப்பு பலூன் பறக்க விட்டவர்களுக்கு, கருப்பு துப்பட்டாவுக்கே பயம் வந்துவிட்டதா? சர்ச்சை, விமர்சனம்!
DMK CM MKStalin Black Shall ban issue admk bjp tvk
சென்னை எழும்பூரில் சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டுக் கருத்தரங்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்தார்.
இதன்பின் சிந்துவெளி பண்பாட்டை கண்டுபிடித்து உலகிற்கு அறிவித்த இந்திய தொல்லியல் கழகத்தின் மேனாள் இயக்குநர் சர் ஜான் மார்ஷல் சிலைக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் கருப்பு துப்பட்டா அணிந்த மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும், துப்பட்டாவை ஒப்படைத்த பின்னரே மாணவிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
இதற்க்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதில் சில கண்டன பதிவுகள் பின்வருமாறு:
அதிமுக ஐடி விங்க்:
கருப்பு பலூன் பறக்க விட்டவர்களுக்கு, தற்போது கருப்பு நிற துப்பட்டாவுக்கே பயம் வந்துவிட்டதா முக ஸ்டாலின்?
போகும் போக்கைப் பார்த்தால் திமுக கொடியில் உள்ள கருப்பு நிறம் கூட பறக்கக் கூடாதுன்னு சொன்னாலும் சொல்லுவாங்க போல...
மாணவிகள் கருப்பு துப்பட்டா கூட போடக்கூடாது என்றால், இது "தோழர்கள்" சொன்ன அவசர நிலை தானே?
பாஜக நாராயணன் திருப்பதி:
‘முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சியில் கருப்பு நிற துப்பட்டா அணிந்தோருக்கு அனுமதி மறுப்பு’ : செய்தி.
இனி திமுக நிகழ்ச்சிகளில் முதல்வர் பங்கேற்கும் போது திமுக கொடி இருக்கக்கூடாது என்று உத்தரவிடுவார்களா?
தமிழக வெற்றிக் கழகம் லயோலா மணி;
இதைத்தான் நாங்கள் பாசிசம் என்று சொல்கிறோம்.
அவர்கள் செய்வது பாசிசம் என்றால் நீங்கள் செய்வது பாயாசமா?
English Summary
DMK CM MKStalin Black Shall ban issue admk bjp tvk