#BigBreaking | பாஜக புள்ளியால் வசமாக சிக்கிய அதிமுக முன்னாள் அமைச்சர் - போலீசில் பரபரப்பு புகார்! - Seithipunal
Seithipunal


அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நிகழ்ச்சி ஒன்றில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் அவரின் மகனும், தற்போதைய முதலமைச்சருமான மு க ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசிய வீடியோ ஒன்று ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியாகியது.

இந்த நிலையில், இந்த வீடியோவை பதிவிட்டவர் மீதும், ராஜேந்திர பாலாஜி மீதும் நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளத்தில் பாஜகவின் ஆதரவாளராக செயல்பட்டு வரும் 'கட்டெறும்பு' என்ற பதிவாளர், அண்மையில் முதல்வர் மு க ஸ்டாலின் குறித்தும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஆரம்ப காலம் குறித்தும் மிகவும் கொச்சையாக ராஜேந்திர பாலாஜி பேசிய பேசிய வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த திமுகவினர், மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்த புகார் மனுவில் ராஜேந்திர பாலாஜி மீதும், கட்டெறும்பு என்ற ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிஜேபி ஆதரவாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Complaint against BJP Katterumpu rajendrabalaji


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->