கள்ள ஓட்டு போட்ட திமுக கவுன்சிலர்.? தேர்தல் ஆணையருக்கு உத்தரவிட்ட நீதிபதி.! - Seithipunal
Seithipunal


நகர்புற உள்ளாட்சி தேர்தலின் போது, திமுக கவுன்சிலர் ஒருவர் இரு வாக்கு சாவடிகளில் இரு வாக்கினைப் பதிவு செய்த வழக்கில், மாநில தேர்தல் ஆணையர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று, மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருச்சி மாநகராட்சியின் 56-வது வார்டில் திமுக சார்பாக போட்டியிட்ட மஞ்சுளாதேவி என்பவர், இரண்டு இடங்களில் வாக்குப் பதிவு செய்ததாக புகார் எழுந்தது.

646வது வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்திய மஞ்சுளாதேவி, அதற்கு அடுத்த வாக்குச்சாவடியான 647வது வாக்குச்சாவடியுலும் முத்துலட்சுமி என்பவரின் வாக்கினை பதிவு செய்ததாக புகார் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து, அவரின் வெற்றியை செல்லாது என்று அறிவிக்க கோரி எதிர்க்கட்சியினர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கை விசாரணை நீதிபதி அவர்கள், வருகின்ற 10ஆம் தேதி மாநில தேர்தல் ஆணையர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk counselor double vote issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->