வேலூரில் மீண்டும் கதிர் ஆனந்த்.? திமுக தலைமை ஆலோசனை.!! - Seithipunal
Seithipunal


திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் சென்னை, வேலூர், அரக்கோணம் நிர்வாகிகளுடன் திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை நடத்தியுள்ளது.

8வது நாளாக நடைபெறும் திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு மற்றும் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் பங்கேற்று உள்ளனர்.

எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் வேலூர் அரக்கோணம் சென்னை பகுதிகளுக்கு உட்பட்ட நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்தான கருத்துக்கள் கேட்டு அறியப்படுகிறது. 

கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொது தேர்தலில் வேளூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக பொதுச்செயலாளரும் மூத்த அமைச்சருமான துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்துக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்படலாம் என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK discuss with Vellore arakkonam Chennai cadres


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->