வாய்ப்புக்காக ஓடுபவன் நாய்க்கு சமமானவன்..!! அமைச்சர் துரைமுருகனின் பேச்சால் திமுகவில் சலசலப்பு..!! - Seithipunal
Seithipunal


திமுகவின் முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் நேற்றிரவு 100 பொதுக்கூட்டங்கள் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுகவின் தற்போதைய பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தலைமை தாங்கினார். அந்த பொதுக் கூட்டத்தில் தனக்கும் எம்.ஜி.ஆருக்குமான நெருக்கம் பற்றி நினைவு கூர்ந்தார். 

தன்னை அதிமுகவுக்கு வருமாறு எம்.ஜி.ஆரே நேரில் அழைத்ததாகவும் ஆனால் என் தலைவர் கலைஞர், என் கட்சி திமுக என அவரிடம் நேருக்கு நேர் சொன்னதாகவும் பேசியுள்ளார். தன்னை வாழ வைத்த தெய்வம் எம்.ஜி.ஆர் என புகழ்ந்த துரைமுருகன் வாய்ப்பு கிடைக்கிறது என்பதற்காக ஓடுபவன் எச்சில் இலையில் சாப்பிடும் நாய்க்கு சமமானவன் என கடுமையாக விமர்சனம் செய்தார். திமுக அமைச்சர் துரைமுருகனின் இந்தப் பேச்சைக் கேட்டு அங்கிருந்த திமுகவினர் இடையே சலசலப்பை உண்டாக்கியது. 

யாரை மனதில் வைத்து துரைமுருகன் இப்படி பேசுகிறார் என உடன்பிறப்புகள் முணுமுணுத்தனர். இத்தகைய பேச்சால் பெயரளவுக்கு கூட திமுகவின் உடன் பிறப்புகள் கைதட்டவில்லை. 

தற்பொழுது திமுக அரசின் அமைச்சரவையில் ராஜகண்ணப்பன், ரகுபதி, அனிதா ராதாகிருஷ்ணன், செந்தில்பாலாஜி, முத்துசாமி என அதிமுகவிலிருந்து திமுகவுக்கு வந்த பலரும் முக்கிய அமைச்சர்களாக வலம் வரும் நிலையில் அமைச்சர் துரைமுருகனின் இத்தகைய பேச்சு திமுகவில் அதிர்வலையை உண்டாக்கியுள்ளது. 

அமைச்சர் துரைமுருகன் இத்தகைய பேச்சின் மூலம் அவர் அதிருப்தியில் இருப்பது வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது. எம்.ஜி.ஆரை புகழ்ந்து பேசியது கூட பிரச்சனையில்லை, வாய்ப்பு கிடைக்கிறது என்பதற்காக ஓடுபவன் எச்சில் இலையில் சாப்பிடும் நாய்க்கு சமமானவன் என அவர் பேசியிருப்பது திமுகவில் பெரும் சலசலப்பை உண்டாக்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Duraimurugan said who runs for opportunity is like a dog


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->