பாசிஸ்ட்டுகளின் இந்த ஓரவஞ்சனை தொடர்ந்தால், தமிழ்நாடு அவர்களை மீண்டும் தண்டிப்பது உறுதி - DyCM உதயநிதி எச்சரிக்கை!
DMK DyCM Udhayanidhi Stalin say about DMK Protest and WARN to BJP Govt
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "கிராமப்புற பொருளாதாரத்திற்கும் - சாமானிய மக்களின் வாழ்வாதாரத்திற்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் முதுகெலும்பாக இருந்து வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய நிதியை ஒன்றிய அரசு நிறுத்தியுள்ளதை ஒரு போதும் ஏற்க முடியாது.
100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் உழைத்து களைத்த மக்களுக்கு சேர வேண்டிய ஊதியத்தை நிறுத்துவது அவர்களுக்கு இழைக்கும் மாபெரும் அநீதி.
இதனை கண்டித்து தமிழ்நாடெங்கும் கழகம் நடத்துகிற கண்டன ஆர்ப்பாட்டத்தின் போர்க்குரல் டெல்லியின் செவிகளில் விழட்டும்.
பாசிஸ்ட்டுகளின் இந்த ஓரவஞ்சனை தொடர்ந்தால், தமிழ்நாடு அவர்களை மீண்டும் தண்டிப்பது உறுதி" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
DMK DyCM Udhayanidhi Stalin say about DMK Protest and WARN to BJP Govt